--- --:--:-- --

கண்பார்வையற்ற நபரிடம் திருட பார்த்த இளைஞர்..!

9

புதுச்சேரியில் மதுபோதையில் தேநீர் கடை உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவலரிடம் ஒப்படைத்தனர்.

 

புதுச்சேரி முத்தையால் பேட்டை பகுதி பின்புறம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தேநீர் கடை நடத்தி வருகிறார். இங்கு மதுபோதையில் வந்த இளைஞர் தேநீர் கடையில் அமர்ந்திருந்த கண்பார்வையற்ற நபரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்ற அந்த இளைஞர் தன் வைத்திருந்த கத்தியால் பிரபாகரன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

 

அங்கு இருந்தவர்கள் இளைஞரை உடனடியாக மடக்கி பிடித்து அந்த வழியே சென்ற காவலர்களிடம் ஒப்படைத்தனர், காயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon