தலைக்கவசம் அணியாமல் வந்தவரை காவலர் நிறுத்தியதால் ஆத்திரம்..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் சாத்தூர் சிவகாசி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த சிவராமகிருஷ்ணன் என்ற இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் இந்த வேலையில் நீ இருக்க மாட்டாய் என காவல்துறை அதிகாரியை மிரட்டும் தோணியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்த இளைஞர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த காணொளி தற்பொழுது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





