திடீரென இடிந்து விழுந்த காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவர்..!
சென்னை கிண்டியில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் காவலர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 15ஆவது பிளாக் மொட்டைமாடியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து திடீரென கீழே விழுந்தது.
இதில் கீழே நிறுத்தப்பட்டிருந்த காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் முற்றிலுமாக சேதமடைந்தது. கட்டடத்தை உடனே சீரமைத்து தரவேண்டும் என காவலர் குடியிருப்பு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





