ஓட்டுநரின் அலட்சியத்தால் கீழே விழுந்த மூதாட்டி..!
பேருந்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால் அரசு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பொழுது மூதாட்டி தவறி விழுந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேலூர் ஓட்டேரி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்க முயன்ற அரசு பேருந்து நின்றுள்ளது.
அப்பொழுது அதில் பயணிகள் இறங்கும் முன்னே கல்லூரி மாணவர்கள் பேருந்தை முந்தியடித்துக் கொண்டு ஏறினார். இதனால் பேருந்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு மூதாட்டி ஒருவர் இறங்கிய பொழுது தடுமாறி கீழே விழுந்தார்.
இதனை சற்றும் கண்டு கொள்ளாமல் ஓட்டுநர் தொடர்ந்து பேருந்து இயக்கி சென்றதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





