ரயில் விபத்தை தடுத்த தென்காசி தம்பதி.. முதலமைச்சர் பாராட்டு..!
தென்காசியில் டார்ச் லைட் மூலம் ரயிலை நிறுத்த செய்து பெரும் விபத்தை தடுக்க உதவிய தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டியதோடு வெகுமதியும் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தில் கடந்த 25ஆம் தேதி லாரி ஒன்று விபத்தில் சிக்கி தண்டவாளத்தில் கவிழ்ந்து. அப்பொழுது அந்த வழியாக வந்த சண்முகையா வடகொதியா தம்பதி தண்டவாளத்தில் ஓடிச்சென்று டார்ச் லைட் மூலம் எச்சரிக்கை செய்து நிறுத்தி செய்தனர்.
இதனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். நேரில் வரவழைத்து முதலமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதியாக முதலமைச்சர் வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





