பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு..!
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள கன்னட அமைப்பு நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன், காரணமாக நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.
அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் கன்னடத்தில் ‘ சிக்கு’ என்ற பெயரில் வெளியாகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது,அங்கு வந்த கன்னட ஆதாரவாளர்கள் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நிகழ்ச்சியின் பாதியில் இருந்து அவர் வெளியேறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




