ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஏடிஎம் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தின் சட்டர் மற்றும் பக்கவாட்டு தகடுகள் மின்சாரம் பாய்ந்துள்ளது.

 

ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்தவர்கள் இதனை உணர்ந்து அச்சமடைந்துள்ளனர். சிலர் தாமாக முன்வந்து முன்னெச்சரிக்கை பதாகை வைத்துள்ளதால் பணம் எடுக்க வந்தவர்கள் அச்சத்துடன் திரும்பி சென்றனர்.