காண்போரை கலங்க வைத்த நிகழ்வு.. இராணுவ சீருடை அணிந்து 6 வயது மகன் இறுதி மரியாதை..!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கர்னல் சிங்குக்கு அவரது ஆறு வயது மகன் ராணுவ உடையில் ஜெய்ஹிந்த் கோரி இறுதி மரியாதை செலுத்தியது காண்போரை கலங்க செய்தது.
கர்னல் சிங்கின் உடல் பஞ்சாப் மாநிலம் மகாநதி மாவட்டத்திற்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. கர்ணலின் சொந்த ஊரில் கர்னலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரே துயரத்தில் மூழ்கி இருக்க அவரது மனைவி தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இறுதி நிகழ்வில் 6 வயது மகன் மற்றும் இரண்டு வயது மகள் இவரும் பங்கேற்றனர். முழு இராணுவ மரியாதை செலுத்தப்பட்ட நிலையில் இராணுவ சீருடை போன்ற உடை அணிந்திருந்த சிறுவன் தனது தந்தைக்கு ஜெய்ஹிந்த் எனக்கூறி இறுதி மரியாதை செலுத்தியதை கண்டவர்கள் கண்ணீர் விட்டு கலங்கி அழுதனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





