நுங்கு வியாபாரிக்கு அரிவாள் வெட்டு.. தப்பி ஓடிய இளைஞர்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நுங்கு கேட்டு தராத வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். வடக்கு பிச்சாபுரம் பகுதியை சேர்ந்த கோபால் சாமி சிதம்பரம் நகரில் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்ற மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் இலவசமாக நுங்கு கேட்டதாக தெரிகிறது. அதற்கு கோபாலசாமி மறுத்ததால் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டிவிட்டு ராஜேஷ் ஓடினார்.
அப்போது எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து ராஜேஷ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





