பள்ளிக்குள் மாணவர்கள் முன்னே தலைமை ஆசிரியரை தாக்கிய தாளாளர்..!
தேனியில் பள்ளியின் தலைமை ஆசிரியரை தாளாளர் தாக்கிய விவகாரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மகாராஜா தொடக்கப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் அன்பழகன் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில் அங்கீகாரம் இல்லாத மனையில் செயல்பட்டு வந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு முற்றிலுமாக பாதிக்கப்படும் வகையில் பள்ளியின் செயல்பாடுகள் இருந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





