அரசு பேருந்து மோதி 9 வயது சிறுமி உயிரிழப்பு..!
கும்பகோணம் அருகே அரசு பேருந்து மோதி ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த ராஜபுரத்தை சேர்ந்தவர் முகமது. அவரது மகள் ஷரின். ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு தனது தாத்தா உடன் இருசக்கர வாகனத்தில் பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென ஜலாலுதீன் பிரேக் பிடித்தத்தில் இரண்டு பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரம் சிறுமி மீது ஏறியது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த தாத்தா, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





