--- --:--:-- --

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்..கோவை முழுவதும் டிரோன் பறக்க தடை..!

10

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கோவையில் விசைத்தறியாளர்களின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்.

 

இதற்காக சென்னையில் இருந்து செல்லும் முதலமைச்சரின் வருகையொட்டி கோவை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டம் முழுவதும் தூண்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பறக்க விடும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon