--- --:--:-- --

ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி..!

9

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பரவும் பதந்தி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

 

ரத்த சோகையை கட்டுப்படுத்துவதற்காக சாதாரண அரிசியில் செரிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுவதால் அது பிளாஸ்டிக் போல காட்சி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்து இருந்தாலும் மக்களிடையே குழப்பம் இருக்கிறது.

 

இந்த நிலையில் ரேஷன் அரிசியை தண்ணீரில் போடும் போது அது தனித்தனியாக பிரிவது போல பரவும் வீடியோ மக்களிடையே குழப்பத்தை அதிகரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon