இம்ரான் கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் ரத்து..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தையும் காண அரசு நிறுவனங்களுக்கு எதிராக விழிப்புணர்வை தூண்டு வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கில் இம்ரான் கானுக்கு எதிராக பிணையில் வர முடியாத வகையில் கைது வாரண்ட்டை உள்ளூர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான் கான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி முறையிடப்பட்டது.
இந்த நிலையில் அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





