--- --:--:-- --

குஜராத், ஹிமாச்சல்பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

1

குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 187 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

 

1621 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். குஜராத்தில் பாரதிய ஜனதா காங்கிரஸ் மற்றும் கட்சிகளிடையே முன்னுரை போட்டி நிலவுகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் போட்டியிடும் கட்லோடியா தொகுதி, காங்கிரஸ் கட்சியின் விக்னேஷ் மேவாடி போட்டியிடும் கர்கள், பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிபாபா போட்டியிடும் ஜாம்நகர் வடக்கு தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக கவனம் ஈர்க்கின்றன.

 

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் தற்பொழுது முதல்வராக ஜெயராம் தாக்கூர் உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon