வங்க கடலில் உருவானது மாண்டஸ் புயல்..!
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள புயல் தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கு 640 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மேற்கு வட மேற்கு திசையில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. நாளை நள்ளிரவு வாக்கில் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





