விடுதியில் ஆண்களுக்கு இல்லாத நேரக் கட்டுப்பாடு பெண்களுக்கு ஏன் என நீதிபதி கேள்வி..!
ஆண்களுக்கு இல்லாத நேரக் கட்டுப்பாடு பெண்களுக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகள் செல்ல நேர கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணையில் ஆண்களுக்கு இல்லாத கட்டுப்பாடு பெண்களுக்கு மட்டும் ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பிரச்சனை செய்பவர்களை அடைத்து வைக்க வேண்டுமே தவிர பெண்களை இல்லை என்ற நீதிபதி விடுதி வளாகத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்றார். மேலும் பெண்களும் சமூகத்தில் வாழ வேண்டும் என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





