பால் குடிக்கும் பொழுதே பரிதாபமாக உயிரிழந்த 15 நாள் குழந்தை..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறகு 15 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரபாகரன் – ரெஜினா தம்பதிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
வீட்டில் குழந்தை பால் குடிக்கும் பொழுது மூச்சு திறனலில் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைப்பு செய்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





