மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் தலைமறைவு..!
ராணிப்பேட்டையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பள்ளி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் முருகன்.
இவர் மீது பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் முருகன் தலைமுறைவானதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து தலைமுறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





