--- --:--:-- --

வேலுமணி மீதான வழக்குகளில் இன்று தீர்ப்பு..!

1

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஆகிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

 

இதனிடையே சென்னை கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு இருப்பதாகவும் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.

 

வேலுமணியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இரு வழக்குகளும் இன்று பிற்பகல் தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon