குஜராத்தில் முதல் கட்டமாக நாளை வாக்குப்பதிவு..!

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் நாளை முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

எனவே அந்த தொகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பரப்புரை நிறைவு பெற்றது. சௌராஷ்ட்ராக்ட்ஸ் தெருக்கூஜராத் மணி நகர் கோத்ரா உள்ளிட்ட 25 தொகுதிகள் முதல் கட்ட வாக்குப்பதிவில் விஐபி தொகுதிகளாக கருதப்படுகின்றன.

 

இந்த நிலையில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.