--- --:--:-- --

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை அமலாகிறதா..?

6

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாணவர்களின் பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ் கந்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கிட்டு உரையாற்றினார்.

 

அப்பொழுது காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில போலீசாருக்கு தொடர்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

 

உள்நாட்டு பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை அமல் படுத்துவது என்று யோசனை கூறினார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பங்கு என்றும் நாட்டின் ஒற்றுமையுடன் ஒருமைப்பாடு இணைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon