--- --:--:-- --

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது..!

7

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது என்று தேர்தல் ஆணையரிடம் பாரதிய ஜனதா கட்சி கூறிய நிலையில் அதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

தேர்தல் வாக்குறுதிகளை கூறி இலவச திட்டங்களுக்கு தடை விதிக்க கோரி பாரதிய ஜனதாவை சேர்ந்த ஆசிரியரை உபாத்தியா தொடர்ந்த வழக்கில் விவகாரத்தில் கட்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் தங்கள் நிலைப்பாடு குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

 

அந்த வகையில் பாரதிய ஜனதா சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் வாக்காளர்களை கவர தேர்தல் வாக்குறுதிகள் இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்றும் இது ஏமாற்று வேலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலவசங்களை விட வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச திட்டங்களை அறிவிப்பதும் செயற்படுத்துவதும் ஜனநாயகம் துடிப்பாக செயல்படுவதன் ஒரு பகுதி என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon