கல்லூரி மாணவியை காதலிப்பதில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு..!
விருத்தாச்சலம் அருகே கல்லூரி மாணவியை காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலோர மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த வருண் குமாரும், சுதாகரனும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியை காதலிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்தில் இரண்டு மாணவர்களும் சக கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த கல்லூரி மாணவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களை எச்சரித்து வழக்கு பதியாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது மாணவர்கள் தாக்கி கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





