--- --:--:-- --

ஆறாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை..!

7

சென்னையில் தனியார் விடுதியில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் திடீரென ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவனிடம் இருந்து கிடைத்த கடிதத்தை கைப்பற்றினர். கடிதத்தில் தன் 18 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து விட்டதாகவும் இதுவரை எனக்கு பண உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்றும் தனது இறப்பு குறித்த வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் குறிப்பிட்டு இருந்தார்.

 

பின்னர் போலீசார் வழக்கறிஞர் உத்தமனை வரவழைத்து விசாரித்ததில் கடந்த 2020 ஆம் ஆண்டுமகளிர் காவல் நிலையத்தில் நடந்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றது தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon