2 டன் ரேஷன் அரிசியை கடத்திய கும்பல்..!
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே சரக்கு வாகனம் ஒன்றில் கடத்திவரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு 150க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது புதுவயல் வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதில் 2 டன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்ததையடுத்து போலீசார் அரிசியை கைப்பற்றி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





