--- --:--:-- --

இன்று விஜயவாடா செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!

2

இன்று விஜயவாடா செல்லும் முதலமைச்சர் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார்.இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு புறப்படும் முதலமைச்சர் விஜய், மாலை 5 மணியளவில் விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.மாலை 5.45 மணிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இல்லத்துக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய் அவருடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை வழங்குமாறு வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. தொடர்ந்து 7 மணியளவில் புன்னமி காட் பகுதியில் நடைபெறும் விஜயவாடா உத்சவ் 2.0-வில் பங்கேற்கிறார்.
முதலமைச்சர் விஜயை விழாவுக்கு வரவேற்பதாக, தெலுங்கு தேசம் எம்.பி. கேசிநெனி சிவநாத் (Kesineni Sivanath) எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜயவாடா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் இரவு 10 மணியளவில் சென்னை திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon