ஜந்தர் மந்தர் போராட்டக்களமான வரலாறு
1990-களின் தொடக்கம் வரை டெல்லி இந்தியா கேட் அருகே உள்ள ‘போட் கிளப்’-இல் தான் அனைத்து முக்கிய போராட்டங்களும் நடைபெற்றன.
1988-ல் உழவர் தலைவர் மகேந்திர சிங் திகைத் தலைமையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போட் கிளப்பை முற்றுகையிட்டதால் தலைநகரே முடங்கியது. இதன் விளைவாக 1993-ல் போட் கிளப்பில் போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் உள்ள ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்கான இடமாக தேர்வானது.





