சவரன் ரூ.1,09,480-க்கு விற்பனை
நடப்பு மாதத்தின் தொடக்கத்திலிருந்தே ஆபரணத் தங்கத்தின் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், நேற்றைய தினம் ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமிற்கு ரூ.160-ம் சரிவடைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,760-க்கும், ஒரு கிராம் ரூ.13,720-க்கும் விற்பனையானது.
அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கும் தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், கிராமிற்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,685-க்கு விற்பனையாகிறது. தொடர்ச்சியாக விலை குறைந்து வருவது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், வெள்ளி விலையைப் பொறுத்தவரை தொடர்ந்து 11-வது நாளாக இன்றைக்கும் எந்தவித மாற்றமுமின்றி நிலையாக நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




