--- --:--:-- --

காவலர்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பெண்..!

4

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் காவலர்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பெண்ணை எச்சரித்து அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து 3 போலீசார் நின்றுகொண்டிருக்க சேலை அணிந்த நடுத்தர பெண் ஒருவர் மண்டியிட்டு அவர்களிடம் கைகூப்பி கெஞ்சுகிறார்.

 

சுடிதார் அணிந்த மற்றொரு பெண் அவரது பக்கத்தில் கைகூப்பி இருக்கிறார். இதனை பார்த்த போலீசார் அவர்களை வெளியே போக சொல்கின்றனர். 20 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon