நீலகிரியில் இருபதுக்கு மேற்பட்ட வீடுகளில் விரிசல்..!
நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசலை தொடர்ந்து இருபதுக்கு மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உதகையில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பாதையில் விரிசல் ஏற்பட்டது.
இது சமூக வலைத்தளத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே ஒரு பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாலை நெரிசல் ஏற்பட்டு சாலையில் உள்வாங்கும் பகுதியில் பூமிக்கு அடியில் பாறைகள் நகர்ந்து வருவதாக சந்தேகம் இருப்பதால் புவியியல் வல்லுனர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





