திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன முன்பதிவு நாளை தொடக்கம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன முன்பதிவு நாளை தொடங்குகிறது. காலை 9 மணி முதல் பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 9 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அந்த நாட்களில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படாது எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.