--- --:--:-- --

ஆண் நண்பரால் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்..!

1

செங்கல்பட்டு அருகே செவிலியர் ஒருவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த செவிலியருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

 

இதற்கிடையே பேருந்தில் ஒரு நேர்காணலுக்காக சென்ற செவிலியரை பின் தொடர்ந்த அவரது நண்பரான சரவணன் என்பவர் அவரை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசியுள்ளார்.

 

நினைவு திரும்பி வீட்டிற்கு சென்ற செவிலியர் தனது தாயாருடன் நடந்ததை தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon