மீண்டும் வருகிறது டிக்டாக்..!

ந்தியாவின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி மீண்டும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த பைடான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி இந்தியாவின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்டது.

 

மேலும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. அதில் ஒன்று டிக்டாக். தனிமனித விருப்பு, வெறுப்புகளை பயன்படுத்தும் களமாக டிக் டாக் செயலி உலகளவில் உலா வந்தது.

 

குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையல்ல. டிக் டாக் செயலிக்கு பதிலாக பல மாற்று செயலிகள் இந்தியாவில் தோன்றினாலும் டிக்டாக் அளவிற்கு எந்த செயலியும் பிரபலமாகவில்லை. இந்த நிலையில் வேறு பெயரில் வேறு நிறுவனத்தின் கூட்டணியில் மீண்டும் இந்தியாவிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.