அலுவலக கழிப்பறையில் கேமரா பொருத்திய ஊழியர்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியதாக கூறப்படும் தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சுதாகர் என்ற நபர் நான்காண்டுகளுக்கு மேலாக சத்துணவு பிரிவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்துள்ளார்.

 

சுமார் 20 நாட்களுக்கு முன் அவரது செல்போனை உறவினர் ஒருவர் ஆராய்ந்தபோது ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆபாச காணொளிகள் இருந்துள்ளன. அதிர்ச்சியடைந்த அந்த நபர் சுதாகரின் செல்போனை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்.

 

இதையடுத்து கழிப்பறை மின்விளக்கில் பொருத்தப்பட்டிருந்த அந்த ரகசிய கேமரா மற்றும் சுதாகர் பயன்படுத்திய கணினியின் ஹார்ட் டிஸ்க் அகற்றப்பட்டது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.