இனிமேல் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் இருக்காதா..?

ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது படங்களை அச்சிடுவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் அச்சிடப்பட்ட வருகிறது.

 

இந்நிலையில் ரிசர்வ் வங்கி நோட்டுகள் அச்சிடும் நிறுவனம் மகாத்மா காந்தி மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் உருவப்படங்களை டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

டெல்லியில் உள்ள பேராசிரியர் இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள உருவங்களை தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார். எனவே ரவீந்திரநாத் தாகூர் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களும் ரூபாய் நோட்டுளில் அச்சடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.