10-ம் வகுப்பு தேர்வெழுதாத மாணவர்கள் ஜூலையில் எழுத வேண்டும்..!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர்களின் முழு விவரங்களை கண்டறிந்து வருகிற ஜூலை மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 5ஆம் நாள் தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31ஆம் நாள் வரை நடைபெற்றது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு 27 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதினர்.
இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளை 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தமாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு விபரங்களை கண்டறிந்து வருகிற ஜூலை மாதம் நடக்கக்கூடிய தேர்வில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





