பாலத்திலிருந்து மகன் மற்றும் மகளை தள்ளிவிட்டு கொன்ற தந்தை..!

கேரளாவில் பெரியாற்று பாலத்திலிருந்து மகன் மற்றும் மகளை ஆற்றில் தள்ளி விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாரின் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன்.

 

இவர் தனது மகன் மற்றும் மகள் பிரியாவுடன் அலுவலகத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென பாலத்திலிருந்து பெரியாற்றில் மகன் மற்றும் மகளை தள்ளிவிட்டு அவரும் குதித்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்த மக்கள் மகன் மற்றும் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

ஆற்றில் மாயமான ஹரிஹரனை மூன்று மணிநேர தேடுதலுக்கு பிறகு சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.