இளைஞரை கடத்திய கல்லூரி மாணவர்கள்..!

சென்னை பெருவல்லூரில் இளைஞர் ஒருவரை கடத்தியது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயம் காலனியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக தெரிகிறது.

 

அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கடத்திய நான்கு பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தனியார் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், ஆதித்யா மற்றும் அம்பத்தூரை சேர்ந்த வசந்த், தேனியை சேர்ந்த அனிஷ் என்பது தெரிய வந்தது.

 

மேலும் 20 லட்சம் ரூபாய் பணம் மாயமானது தொடர்பாக நடத்திய விசாரணையில் அம்பலமானது.