பறந்த விமானத்தில் எந்திரக் கோளாறு..!

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 104 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

 

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 98 பயணிகள், விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர் இருந்தனர்.

 

விமானம் ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அந்த விமானம் இழுத்து வரப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது.