5 வருடங்களுக்கு பிறகு திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த ஸ்ரீ திவ்யா..!

மிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா, இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ திவ்யா, அவரின் அறிமுக திரைப்படத்திலே பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார்.

 

அப்படத்தை தொடர்ந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி என வரிசையாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஹிட்டாகின. இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தில் கடைசியாக ஸ்ரீதிவ்யா காணப்பட்டார்.

 

ஆனால் அப்படத்திற்கு பின் ஸ்ரீ திவ்யா எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. மலையாளத்தில் வரவேற்பை பெற்றுள்ள ஜன கன மன திரைப்படத்தில் தான் ஸ்ரீ திவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

சில வருட இடைவேளைக்கு பின் அவரை கண்ட ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் பரப்பி வருகின்றனர்.