--- --:--:-- --

3 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை..!

3

மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

 

கிராமப்புற பெண் குழந்தைகள், கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக வங்கிக் கணக்கு தொடங்க ஏதுவாக ரூபாய் 16.75 கோடி நிதி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் என்ற அளவில் உள்ள மாணவியருக்கு மட்டும் ஊக்கத் தொகை நேரடியாக வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon