--- --:--:-- --

நடிகை கரீனா கபூருக்கு கொரொனா..! வீட்டுக்கு சீல்..!

TOIFA Awards 2016

TOIFA Awards 2016

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு சூப்பர் ஸ்பிரெட்டராக இருக்கலாம் என்பதால் மும்பையில் அவரது வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமக்கு தொற்று எப்போது ஏற்பட்டது? எங்கெல்லாம் சென்றார்? எத்தனை பேருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பது உள்ளிட்ட எந்த விவரங்களையும் கரீனாகபூர் சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி கரீனா கபூர் உள்ளிட்ட பல நடிகைகளும், இந்தி திரையுலகப் பிரபலங்களும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon