--- --:--:-- --

ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவன் ..! பரபரப்பு..!

9

ஓசூர் அருகே அரசு பள்ளியில் மாணவன் ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

 

இந்த பள்ளியில் பதினோராம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் ஒழுங்கீனமாக இருந்த மாணவரை அடித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon