தங்கைக்காக ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த சாய் பல்லவி..!

சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ள தனது தங்கை பூஜா கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சாய்பல்லவி நீங்கள் அனைவரும் படத்தை பார்த்து உங்கள் அன்பை அவளுக்கு வழங்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

பிரேமம் படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அவரின் தங்கை கதாநாயகியாக அறிமுகமாக உள்ள புதிய படம் சித்திரை செவ்வானம். ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதையை இயக்குனர் ஏ‌எல் விஜய் எழுதியுள்ளார்.

 

நடிகை சாய் பல்லவி தன்னுடைய படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் மகிழ்ச்சியை விட பார்வையாளர்கள் பொலியும் அன்பு அதிக போதையைத் தரும் எனவும், அதை பெறுவதற்கு ஒவ்வொரு நிலையிலும் தன்னை ஒரு சிறந்த நபராக வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை எப்போதும் பாதுகாப்பேன் என்று தங்கை குறித்து நடிகை சாய் பல்லவி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.