--- --:--:-- --

ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கினர்..!

2

சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் இறங்கி குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.

 

சைதாப்பேட்டை அரசு பண்ணை முதல் தெருவை சேர்ந்த பிரசாத், வாசுகி தம்பதியரின் மகன் ஹரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், பிரமிலா தம்பதியின் மகன் சந்தோஷ் ஆகியோர் நேற்று மாலை ஒய்‌எம்‌சி‌ஏ மைதானத்திற்கு பின்புறம் உள்ள அடையாறு ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

 

அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக சேற்றிலும் சகதியிலும் சிக்கிக்கொண்டு கூக்குரலிட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சந்தோஷை உயிரிழந்த நிலையில் மீட்டனர். தொடர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஹரி என்ற சிறுவனை படகு மூலம் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon