--- --:--:-- --

12 ஆண்டுகளுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா..!

3

ஜீவா நடிக்கும் கோல்மால் படத்தின் மூலம் நடிகை மாளவிகா மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தமிழில் அஜித்திற்கு ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக இருந்தவர் மாளவிகா.

 

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் ஆகிய பாடல்களில் மாளவிகாவின் நடனம் பேசப்பட்டது. மீண்டும் நடிப்பது குறித்து பேசிய மாளவிகா தான் கடைசியாக விஜயுடன் படத்தில் நடித்ததாகவும், அதற்குப்பின் திருமணமாகி குழந்தை பெற்றதால் அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

 

இந்த நிலையில் கோல்மால் படத்தில் ஜீவாவின் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon