உண்மையை பேசுவதற்கு தண்டனை கிடைக்கிறது : ராகுல் காந்தி
இந்தியாவில் ஊடகம் மட்டுமில்லாமல் ஜனநாயகமும் ஆபத்தில் தான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 180க்கு 142வது இடத்தில் இந்தியா இருக்கும்பொழுது இங்கு ஊடகம் மட்டும் ஆபத்தில் சிக்கவில்லை. ஜனநாயகமும் ஆபத்தில் தான் சிக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
இதேபோன்று தேசிய பத்திரிகை தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிட்ட ராகுல்காந்தி உண்மையைப் பேசுவதற்கு தண்டனை கிடைக்கும் பொழுது பொய்யாக்கி உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக திரிபுராவில் வன்முறை குறித்த செய்திகளை வெளியிட்டு இரண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார்.






