சென்னையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட சசிகலா..!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சசிகலா மக்களுக்கு உதவிகளை வழங்கினார். காந்திநகரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.
கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, கேகே நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்ட சசிகலா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர் சாலைகளில் நீர் தேங்கி இருப்பதை இந்த அரசு பார்த்து உள்ளதாகவும் மீண்டும் இதுபோன்ற நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக்கொண்டார்.






