--- --:--:-- --

கொசு மருந்து திரவத்தைக் குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு.!

7

சென்னை பல்லாவரம் அருகே ஆல் அவுட் கொசு மருந்து திரவத்தை குடித்ததாக கூறப்படும் 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த ஆல் அவுட் திரவ பாட்டிலை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அதன் மேற்பகுதி திறந்திருந்த திரவத்தை குடித்ததாகவும் கூறப்படுகிறது.

 

நெஞ்சு எரிச்சலால் கதறிய குழந்தையை அருகில் இருந்த சாய் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கும் பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் குழந்தைக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவமனை மருத்துவர் சுபாஷ் ஒரு போலி மருத்துவர் என்பது தெரிய வந்ததாக கூறப்படும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon